உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி விழா துவக்கம்

பெரியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி விழா துவக்கம்

காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை  அம்மனுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, இரவு 8.30 மணிக்கு காப்புக்கட்டுதலும், கொடியேற்றமும் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது. தினமும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 21ம் ÷ ததி திருவிழாவும், 22ம் தேதி காலை 6மணிக்குள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும்,  உருவாட்டி கிராம பொதுமக்களும் செய்துவருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !