உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரப் பெருவிழா: பெண்ணாடம்மடாலயத்தில் கொடியேற்றம்!

பங்குனி உத்திரப் பெருவிழா: பெண்ணாடம்மடாலயத்தில் கொடியேற்றம்!

பெண்ணாடம்: பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, பெண்ணாடம் சிவசுப்ரமணிய சுவாமி மடாலய திருக்கோவிலில் கொடியேற்றும்  நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 4:30 மணியளவில் கணபதி ஹோமம், 7:30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது.  மாலை 5:00 மணியளவில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, வரும் 22ம் தேதி மாலை 5:00  மணியளவில் மகா அபிஷேகம், 23ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி காலை 7:30 மணியளவில் வெள்ளாற்றங்கரையில் காவடி பூ ஜை, தொடர்ந்து காவடி, செடல் அணிந்து பக்தர்கள் வீதியுலா நிகழ்ச்சியும், 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 25ம் தேதி இடும்பன் பூஜையும்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !