பழநி உண்டியல் வசூல் ரூ.1.36 கோடி
ADDED :3517 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 19 நாட்களில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 36 லட்சத்து 47 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 1006 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 300 கிராம், வெளிநாட்டு கரன்சி 686 மற்றும் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 36 லட்சத்து 47 ஆயிரத்து 842 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில் மற்றும் வெள்ளியிலான தொட்டில், முருகன் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலைகணக்கியல் அலுவலர் வீரச்சாமி, மற்றும் கோயில் அலுவலர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.