உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரிநாத், கேதார்நாத்தில் பக்தர்களுக்கு வசதிகள்!

பத்ரிநாத், கேதார்நாத்தில் பக்தர்களுக்கு வசதிகள்!

ராமேஸ்வரம் : தென்மாநில பக்தர்களுக்கு தேவையான வசதிகள் பத்ரிநாத், கேதார்நாத்தில் செய்யப்பட உள்ளன. உத்தரகாண்ட் மாநில அரசு சுற்றுலாத்துறை உதவி தலைவர் சூரத்ராம் நாட்டியால் தலைமையில் அதிகாரிகள் குழு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலில் பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சூரத்ராம்நாட்டியால் கூறியதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுநோத்ரி ஆகிய புண்ணிய தலங்களில் தென்மாநில பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய உள்ளோம். இதற்காக திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்களை பார்வையிட்டுள்ளோம். மேலும் சில கோயில்கள் பார்வையிட உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !