உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொடிமரம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொடிமரம்!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில், ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் வைக்கப்படவுள்ளது. எந்த வடிவமைப்பில் இதை உருவாக்குவது என பட்டர்களிடம் கோயில் நிர்வாகம் ஆலோசனை கேட்டுள்ளது.இக்கோயிலில் திருவிழா துவங்கியதை அறிவிக்கும்விதமாக, சுவாமி சன்னதி எதிரேயுள்ள பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இம்மரம் செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. பல நூற்றாண்டு பழமையான தேக்கு வகையைச் சேர்ந்த இந்த மரத்தில், ஆங் காங்கே பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், சில மாதங்களுக்கு முன், செங்கோட்டை வனப்பகுதியில் இருந்து 62 உயரத்திற்கு புதிய தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலின் வடக்காடி வீதியில் செதுக்கும் பணி துவங்கியது. இந்நிலையில், புதிய மரத்தை எந்த வடிவமைப் பில் செதுக் குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. கோயில் நிர்வாக தரப்பில் கூறியதாவது : மற்ற கோயில்களில் உள்ள கொடிமரங்கள் எல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பை உடையவை. ஆனால், இக்கோயிலில் வடிவமைப்பு மட்டும் சற்று மாறியுள்ளது. இதனால் பழைய வடி மைப் பில் உருவாக்குவதா அல்லது மற்ற கோயில்களில் உள்ளது போல் உருவாக்குவதா என பட்டர்களிடம் கருத்து கேட்டு உள்ளோம். ஆக ம விதிப்படி எந்த வடிவமைப்பில் உருவாக்கலாம் என்று விரைவில் கூறுவர். இதற்காக பிற கோயில்களின் கொடிமரங்களின் போட்டோக்களை பட்டர்களிடம் கொடுத்துள்ளோம், என்றனர். பட்டர்கள் கூறியதாவது :பழைய வடிமைப்பில் கொடிமரம் உருவாக்கப்பட் டால் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. பிற கோயில்களில் உள்ளது போல் கொடிமரத்தை உருவாக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் பிடிவாதம் பிடிக்கிறது. ஒரு வேளை புதிய வடிவமைப்பில் கொடிமரம் வைக்கப்பட்டால், அது குறித்து பிற்காலத்தில் தங் களை குறை கூறக்கூடாது என முன்னெச்சரிக்கையாக, "ஆகமவிதி என்றுக் கூறி எங்கள் பக்கம் கோயில் நிர்வாகம் பிரச்னையை திருப்பி விட்டுள்ளது. ஏதோ காரணத்திற்காக தான் மற்ற கோயில் கொடிமரங்களை விட, மீனாட்சி கோயில் கொடிமரம் மாறுபட்டுள்ளது. எனவே பழைய வடிமைப்பில் உருவாக்கினால் மட்டுமே உகந்ததாக இருக்கும் என நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !