உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. நேற்று முன்தினம் இரவு காப்புக்கட்டுதலும், தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ண அணிவகுக்க மான், மயில், ஒயில், கரகாட்டத்துடன் அம்மன் பூதகி வாகனத்தில் வீதியுலா வந்தார். விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் வெள்ளி சிங்கம், அன்னம், ரிஷபம், காமதேனு, கிளி, குதிரை வாகனங்களில் வீதியுலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 24 காலை அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அம்மன் சர்வ அலங்காரத்தில் தேரில் வீதியுலா வருகிறார். அன்று இரவு 4 மணிக்கு கள்ளர் திருக்கோலத்துடன் வைகையில் எழுந்தருளுவார். மார்ச் 26 ல் காலை 4 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !