விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில் 23ம் தேதி உத்திர திருவிழா
ADDED :3529 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில், வரும் 23ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த 14ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினமும், காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 23ம் தேதி காலை 6:00 மணியளவில் சுவாமி வீதியுலா, காலை 8:00 மணியளவில் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து வேல் எடுத்தல் நிகழ்ச்சி, பால்குடம் சுமந்து,செடலணிந்து பக்தர்கள் வீதியுலா சென்று நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். தொடர்ந்து, விருத்தகிரிகுப்பம் குளத்தில் வேல் முழுக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம், 25ம் தேதி இடும்பன் படையல் நிகழ்ச்சி நடக்கிறது.