மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவிலில் தேர் திரு விழா
ADDED :3642 days ago
திருபுவனை: மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று 17 ம்தேதி மதியம் 12.00 மணிக்கு மதகடிப்பட்டு மையானத்தில் மயானக்கொள்ளை நடக்கிறது. முக்கிய விழாவான தேர்திருவிழா நாளை 18 ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை 9.00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.