சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3529 days ago
ஆர்.கே.பேட்டை : சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தை ஒட்டி, வரும், 23ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை, பிராமணர் வீதியில் உள்ளது சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். பங்குனி உத்திரத்தை ஒட்டி, வரும், 23ம் தேதி, 11ம் ஆண்டாக, திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. வரும், புதன்கிழமை, காலை 9:00 மணிக்கு, திருமஞ்சனமும், மாலை 4:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.இதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த, விஜயராகவபுரம் விஜயராகவ பெருமாள் கோவிலிலும், பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது