உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய ஒளிக்கதிர்கள் பட்டதால் தங்க நிறத்தில் ஜொலித்த நந்தி!

சூரிய ஒளிக்கதிர்கள் பட்டதால் தங்க நிறத்தில் ஜொலித்த நந்தி!

வேலுார்: செங்கம் அருகே சூரிய ஒளிக்கதிர்கள் பட்டதால், தங்க நிறத்தில் ஜொலித்தது நந்தி. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த அபூர்வ நிகழ்வை காண, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரிலுள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில், 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவிலில் இருக்கும் நந்திக்கு, 2012ல் பங்குனி, 3-ம் தேதியன்று, சந்தனம் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. அப்போது, ராஜகோபுரம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு, நந்தி மீது விழுந்து எதிரொலித்தது. இதனால், தங்க நிறத்துடன் நந்தி, சிறிது நேரம் ஜொலித்தது. இதைப் பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள், நந்திக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஆண்டுதோறும், பங்குனி, 3ம் தேதி, இந்த அபூர்வ நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த பங்குனி மாதம், 3-ம் தேதியான, நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, சூரிய ஒளிக்கதிர்கள் நந்தி பகவான் மீது பட்டது.இதனால், தங்க நிறத்துடன் சிறிதுநேரம் ஜொலித்தது நந்தி. பின், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அபூர்வ நிகழ்வை காண, ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !