பெத்தாரண்ண சுவாமி கோவில் தேர்திருவிழா
ADDED :3533 days ago
அந்தியூர்: அந்தியூர் பிரம்மதேசத்தில் பெத்தாரண்ண சுவாமி கோவில் தேர்திருவிழா, 22ம் தேதி நடக்கிறது. விழா கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, 21ம் தேதி இரவு புதூர் மடப்பள்ளியில் இருந்து சிம்ம வாகனம், பெருமாள் தேர், மகமேரு தேர் ஆகிய தேர்களை பக்தர்கள் சுமந்து வருவர். இதை தொடர்ந்து, 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் அக்னி கொப்பரை ஊர்வலம் நடக்கிறது. அப்போது கால்நடைகளும் ஊர்வலமாக அழைத்து வரப்படும்.