உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பொன்னேரி : ஆண்டார்குப்பம் பகுதியில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் முடிந்து, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 9:40 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும், காலை, 10:00 மணிக்கு, விநாயகர், பாதாள கங்கையம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும், காலை, 10:15 மணிக்கு, பாலசுப்ரமணிய சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !