திருத்தணிக்கு நாளை பாத யாத்திரை
ADDED :3533 days ago
சென்னை : பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நகரத்தார் திருத்தணி பாத யாத்திரைக்குழு டிரஸ்ட் சார்பில், 38ம் ஆண்டு பாத யாத்திரை நாளை துவங்குகிறது. சென்னை, பவளக்காரத் தெருவில் உள்ள பழைய தண்டாயுதபாணி கோவில் வீட்டில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, பாத யாத்திரை பக்தர்கள், காவடிகள் எடுத்து, அம்பத்துார் வழியாக, ஆவடி சென்று தங்குவர். வரும், 20ம் தேதி திருவள்ளூர், 21ல், ஸ்டீல் பிளாண்ட் வழியாக, 22ம் தேதி, திருத்தணி சென்றடைவர். 23ம் தேதி காலை, 9:00 மணியளவில், காவடி முத்திரைகள், பால்குடங்களை, திருத்தணி மலைப்படிகள் வழியாக எடுத்துச் சென்று, முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை செய்து, இரவு, தங்க ரத புறப்பாடு முடிந்து திரும்புவர்.