பட்டத்தரசி அம்மன் பொங்கல் சாட்டு விழா
ADDED :3533 days ago
அவிநாசி :அவிநாசி சுகாதார ஊழியர் காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், விநாயகர், முருகன், பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடத்தப்பட்டன.நேற்று, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மாலையில் நடந்த சுவாமி புறப்பாட்டில், நேர்ந்து கொண்ட பக்தர்கள், பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிங்க வாகனத்தில், பட்டத்தரசி அம்மன், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தின் போது, வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பட்டத்தரசி அம்மன் கோவில், கமிட்டியினர் மேற்கொண்டனர். இன்று மஞ்சள் நீர் விழாவுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது.