கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :3650 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தது.