மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா!
ADDED :3852 days ago
சென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் நேற்று அறுபத்து மூவர் விழா நடந்தது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின், 8ம் நாளான நேற்று, அறுபத்து மூவர் விழா கோலாகலமாக நடந்தது. தெற்கு மாட வீதியில் 63 நாயன்மார்கள் எழுந்தருளி வலம் வந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்