ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3791 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவ நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் பத்மதளநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கணபதி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. கடந்த 14ம் தேதி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் செய்து கொடியேற்றப்பட்டது. தினமும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து, பத்மதளநாயகி ஆதிபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இன்று 22ம் தேதி காலை திரு த்தேர் உற்சவம் நடக்கிறது.