உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராண நாதஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பிராண நாதஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருக்கனுார்: பி.எஸ்.பாளையம்  கிராமத்தில்  உள்ள  பிராண  நாதஸ்வரர்  கோவிலில்  பிரதோஷ  வழிபாடு நடந்தது. திருக்கனுார்  அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தில் பழமையான பிராண நாதஸ்வரர்  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்,  பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவிலில் உள்ள நந்திக்கு மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நாதஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து  நாதஸ்வரர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கூனிச்சம்பட்டு கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !