சக்தி விநாயகர் கோவிலில் பாலாயண பூஜை!
ADDED :3592 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சக்தி விநாயகர் கோவிலில் பாலாயண பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் ரத்தினம் தெரு சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்து பாலாயண பூஜை செய்தனர். கணபதி ஹோமம், கோ பூஜை சிறப்பு யாகம் நடந்தது. விரைவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க சிறப்பு பூஜை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.