திருக்கோவிலூரில் குருத்தோலை பவனி
ADDED :3817 days ago
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் நல்லாயன் கத்தோலிக்க தேவாலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. விழாவையொட்டி, குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி நின்றனர். அருட்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று தேவாலயத்தை அடைந்தது. அங்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர் பால்ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.