உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூக்கம் தரும் பெண் தெய்வம்!

தூக்கம் தரும் பெண் தெய்வம்!

படுத்தால் தூக்கம் வர மறுக்கிறது... நிம்மதியே இல்லை என வருந்துபவர்கள் திருப்பரங்குன்றத்திலுள்ள ஜேஷ்டாதேவியை வழிபடுவது சிறப்பு. கம்பத்தடி மண்டப மூலையில் நுõறடி நீளமுள்ள சுரங்கப்பாதை இருக்கிறது. அதனுள் புடைப்புச் சிற்பமாக உள்ள இந்த சன்னிதியை சாத்தன் கணபதி என்பவரும், அவரது மனைவி நக்கன் கொற்றியும் எட்டாம் நுõற்றாண்டில் கட்டியுள்ளனர். ஜேஷ்டாதேவியின் அருகில் அவளது மகன், மகள் வீற்றிருக்கின்றனர். ஜேஷ்டாதேவி இரு கால்களைத் தொங்க விட்டு அமர்ந்த கோலத்தில் இருக்கையில் இருக்கிறாள். காதில் குண்டலம் அணிந்த இவளது வலது கையில் தாமரை உள்ளது. மகன் இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்க விட்டு கையில் தண்டம் ஏந்திய நிலையில் இருக்கிறான். மகள் வலது கையில் மலர் ஏந்தியிருக்கிறாள். ஜேஷ்டாதேவியின் வலப்புறம் எருமைத்தலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !