உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜோதி வடிவில் சித்தர்!

ஜோதி வடிவில் சித்தர்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மச்ச முனிவர் ஜோதி வடிவில் வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். ஒரு சமயத்தில் குளம் ஒன்றின் கரையில் அமர்ந்து சிவன் பார்வதிக்கு மந்திர உபதேசம் செய்தார். அங்கிருந்த மீன் ஒன்று சிவனின் உபதேசத்தை ஆர்வமுடன் கேட்டது. இதை அறிந்த சிவன், மீனைக் கருணையுடன் நோக்க அது மனித வடிவம் பெற்றது.  நீ மச்சமுனி என்ற பெயரில் பிறப்பாய், என்று அவர் வரம் அளித்தார். புண்ணாக்கீசர், நந்தி, போகர், காக புஜண்டர், சட்டைமுனிவர் ஆகியோரிடம் சீடராக இருந்த மச்ச முனிவர், அஷ்டமாசித்தி கைவரப் பெற்றார். மச்சம் என்றால் மீன். இவர் ஒரு முறை குழந்தை இல்லாத பெண் ஒருத்திக்கு திருநீறு கொடுத்து மகப்பேறு உண்டாக ஆசியளித்தார். இதை அறிந்த மற்றொரு பெண் பொறாமை உணர்வால், திருநீறு கொடுக்கும் இவரை நம்பாதே என்று தடுத்தாள். நம்பிய அவளும் திருநீறை அடுப்புச் சாம்பலில் போட்டாள். சில காலம் கழித்து மச்ச முனிவர் குழந்தை இல்லாத பெண்ணைச் சந்தித்த போது, நடந்த விஷயத்தைக் கூறி தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். மனம் இளகிய மச்சச முனிவர் அடுப்புச் சசாம்பல் அருகில் நின்று, கோரக்கா... வா.. என அழைக்க குழந்தை ஒன்று தவழ்ந்து வந்தது. அந்த குழந்தையே கோரக்க சித்தர் என்று பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !