பொன்பத்தியில் உறியடி உற்சவம்
ADDED :5237 days ago
செஞ்சி : செஞ்சி தாலுகா பொன்பத்தி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலையில் நடந்த உறியடி உற்சவத்தில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். இரவு சாமி வீதியுலாவும், பாகவதர்களின் சொற்பொழிவும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.