உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி டி.கோட்டாம் பட்டி. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஆண்டுவிழா, நேற்று நடந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில் அனுக்ஞை, இறை அனுமதி பெறுதல், திருமஞ்சன சேவை மற்றும் 27 வகை   அபிஷேகம் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு மேல், திருப்பள்ளி எழுச்சி, புண்யாவாசனம், காயத்திரி ேஹாமம், பஞ்ச சுத்த  ேஹாமம், சுதர்சன ேஹாமம், சாற்று மறை, மாலை 4:30க்கு, திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை நடந்தன. சுற்றுவட்டாரப்  பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !