கின்னசில் இடம் பிடித்தது தைப்பூச நேரலை ஒளிபரப்பு!
கோலாலம்பூர்: மலேஷிய, ‘டிவி’ சேனல், 55 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பிய, தைப்பூச நிகழ்ச்சியின் நேரலை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும், மலேஷியாவில் தைப்பூச திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த திருவிழாவை, கோலாலம்பூரில் இருந்து இயங்கும், ‘அஸ்ட்ரோ’ நிறுவனத்தின், அஸ்ட்ரோ உலகம் டிவி சேனல், இந்த ஆண்டு, ஜனவரி, 22 முதல், தொடர்ச்சியாக, 55 மணி நேரம் ஒளிபரப்பியது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களில் நடந்த தைப்பூச நிகழ்ச்சிகளும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன; இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பி டித்து உள்ளது. மேலும், ‘பேஸ்புக்’ வாயிலாக, தைப்பூச நிகழ்வுகளை, 11 கோடி பேர் பார்த்துள்ளனர். பேஸ்புக் பார்வையாளர்களில், 35 சதவீதம் ÷ பர் அமெரிக்காவையும், 28 சதவீதம் பேர் இந்தியாவையும், 16 சதவீதம் பேர் மலேஷியாவையும் சேர்ந்தவர்களாவர். மலேஷியாவின் சுற்றுலா வளர்ச்சியில், தைப்பூச திருவிழா முக்கிய பங்காற்றி இருப்பதாக, கின்னஸ் உலக சாதனை அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.