ராதா கல்யாண உற்சவம் 27ம் தேதி நடக்கிறது!
ADDED :3818 days ago
கடலுார்: கடலுார் சங்கர பக்த ஜன சபாவில் வரும் 27ம் தேதி ராதா கல்யாண உற்சவம் நடக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சதாபிஷேக ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு 62ம் ஆண்டு ராதா திருக்கல்யாண உற்சவம் கடலுார் திருப்பாதிரிப் புலியூர் சங்கர பக்த ஜன சபாவில் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (26ம் தேதி) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 7:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:30 மணிக்கு அஷ்டபதி பஜனை, இரவு 7:30 மணிக்கு ஜானவாசம், வீதி பஜனை நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை 8:00 மணிக்கு உஞ்சவிரு த்தி பஜனை, 9:00 மணிக்கு ராதா கல்யாண உற்சவம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.