உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள் : இறைவன் கைவிடமாட்டான்!

ரமலான் சிந்தனைகள் : இறைவன் கைவிடமாட்டான்!

நாம் யாரை மிக அதிகமாக நேசிக்கிறோமோ, அவர்கள் பூமியில் வாழும் போது, நம்மைக் கவனித்தாலும், கவனிக்கலாம்; கை விட்டாலும் விடலாம். மனித மனங்கள் அத்தகையது. ஆனால், இறைவன் அப்படியல்ல, அவன், எப்போதும் மாறாத மனநிலையில் இருப்பவன். நாம் அவனை நேசித்தால் அவன் நம்மை நேசிப்பான், நம் துன்பங்களைத் தீர்ப்பான்.ஒரு முறை ஒரு அராபியர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்தார். ""நாயகம் அவர்களே! கியாம நாள் (வாழ்வின் இறுதி நாள்) எப்போது வரும்? எனக் கேட்டார்.

அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ""உமக்கு கியாம நாள் வருவதற்கு முன் அதற்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்? என்றார்கள். அதற்கு அந்த அராபியர், ""அண்ணலாரே! நான் தொழுகை, நோன்பு, ஜகாத் மூலம் அதிக பலன் சேர்க்கவில்லை. ஆனால், அல்லாஹ்வை நான் நேசிக்கின்றேன், என்று கூறினார். நாயகம்(ஸல்) அவர்கள் மகிழ்ந்தார்கள். ""நீர் யாரை நேசிக்கின்றீரோ, அவருடன் கியாம நாளில் இருப்பீர், என்றார்கள். இறைவனை நேசித்தால், இறைவன் நம்மோடு இருப்பான் என்கிறார்கள் நாயகம்.நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து நோன்பு நோற்போம். தொழுகையைக் கடைபிடிப்போம். இறைவனின் கருணைக்கு பாத்திரமாவோம். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !