உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரில் ஹை-டெக் பாதுகாப்பு

குருவாயூரில் ஹை-டெக் பாதுகாப்பு

குருவாயூர்:பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது. கோவிலுக்குள் 96 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, மாநில போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் குருவாயூர் தேவஸ்வம் போர்டு பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சூரில் நடந்தது.

கூட்டத்தில், கோவிலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நிரந்தர ஸ்கேனர்கள் அமைப்பது, கோவில் மூலவர் சன்னிதிக்கு முன் நுழைவாயில் கொண்ட 16 மெட்டல் டிடெக்டர்கள், கையில் வைத்துக் கொண்டு பக்தர்களை பரிசோதிக்க வசதியாக 18 மெட்டல் டிடெக்டர்கள், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பரிசோதிக்க எக்ஸ்ரே ஸ்கேனர்கள் என, பல்வேறு அதிநவீன கருவிகள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கோவில் வளாகம், சுற்றுச்சுவர், வெளியிடங்கள், குருவாயூர் நகரின் முக்கிய பகுதிகள் என பலவும் கண்காணிப்புக்குள் வர உள்ளது. இதற்காகும் செலவை, குருவாயூர் தேவஸ்வம் போர்டோ அல்லது மாநில அரசோ ஏற்கும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில், கோவில் நகரே பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !