மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி விழா
சேத்தூர்: சேத்தூர்- மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த, பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்தூர் - மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலின் பூக்குழி திருவிழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மாலையில் மருளாடி அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.திருவிழாவின் 4,5 ம்நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்திலும்,7ம் நாளான்று காப்பு கட்டும் நிகழ்ச்சியும், இரவில் அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நாளான நேற்று பால்குடம் எடுத்தல், மாலையில் ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பூ இறங்கும் பக்தர்களுக்கு பின்பு முளைப்பாரி, ஆயிரங்கண் பானை எடுத்து வந்தனர். விழாவில் கோயில்பரம்பரை அறங்காவலர் துரை ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று பொங்கலிடுதல் நடக்கிறது. ஏற்பாட்டை நிர்வாககுழு உறுப்பினர்கள், மாரியம்மன் கோயில் விழாக்கமிட்டியினர் செய்தனர்.