பிராமணர் சங்க பஞ்சாங்கம் வெளியீடு
ADDED :3510 days ago
வேலூர்: வேலூர் பிராமணர் சங்கம் சார்பில், பஞ்சாங்கம் வெளியிடும் விழா சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. வேலூர் பிராமணர் சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் லலிதா கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கணேச சாஸ்திரிகள் பஞ்சாங்கத்தை வெளியிட்டார். உமாபதி சிவம், செயலாளர் ராஜா, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.