உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொய்யல் முனியப்பசுவாமி கோவிலில் விழா

நொய்யல் முனியப்பசுவாமி கோவிலில் விழா

நொய்யல்: கரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட, நொய்யல் பகுதியில் உள்ள முனியப்பசுவாமி கோவிலில் பங்குனி மாதம் முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பூக்களைக் கொண்டு முனியப்பசுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதேபோல் கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் காலை தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாரியம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !