உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு பத்திரகாளியம்மன் கோயில் விழா!

பாலமேடு பத்திரகாளியம்மன் கோயில் விழா!

பாலமேடு: பாலமேட்டில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் விழா நான்கு தினங்கள் நடந்தது. விழாவில் அம்மன் கரகம் ஜோடித்து ஊர்வலம் வருதல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், விரதமிருந்த பக்தர்களின் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி, பால்குடம் எடுத்தல், கரும்பில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுதல் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவு நாளான நேற்று முளைப்பாரி துõக்கி ஊர்வலமாக சென்று நீரில் கரைத்து மஞ்சள் நீராடினர். ஏற்பாடுகளை நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !