பிரதோஷ வகைகள்
ADDED :3875 days ago
பிரதோஷங்கள் அவை அனுஷ்டிக்கும் நேரங்களைப்பொறுத்து ஐந்து வகையாக உள்ளன.அவையாவன,
1. நித்திய பிரதோஷம் தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் நட்சத்திரங்கள் உதயமாகும் வரையில் உள்ள காலகட்டத்தில் வருவது 2. பட்ச பிரதோஷம் வளர்பிறை சதுர்த்தியன்று வருவது.
3. மாதபிரதோஷம் தேய்பிறை திரயோதசியில் வருவது.
4. மகா பிரதோஷம் தேய்பிறை திரயோதசி திதி சனிக்கிழமையில் வருமானால், மஹாபிரதோஷம்.
5. பிரளய பிரதோஷம் உலகம் அழியும் காலத்தில் எல்லாமே, சிவனிடம் ஒடுங்கும் நேரம்.