அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
ADDED :3519 days ago
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள், யாக பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காலைபைரவர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 6 மணிக்கு, பைரவருக்கு அஷ்ட பைரவர்யாகம், அஷ்டலஷ்மியாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்தது. மேலும், பைரவருக்கு, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை,சிறப்பு உபசார பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள ஆர்த்தி நடத்தது. விபூதி காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.