வடக்கு நோக்கிய சிவன் கோயில்
ADDED :3875 days ago
சிவன் கோயில்கள் கிழக்கு நோக்கி அதிகமாகவும், மேற்கு நோக்கி குறைவாகவும் இருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கடம்பவனநாதர் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கங்கைக் கரையில் காசிவிஸ்வநாதர் கோயில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக்கரையில் வடக்கு நோக்கி இருக்கும் இத்தலத்தை தரிசித்தால் காசியை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.