உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் லுார்து அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நாளை துவங்குகிறது!

வில்லியனுார் லுார்து அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நாளை துவங்குகிறது!

புதுச்சேரி: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தின் 139வது ஆண்டு பெருவிழா, நாளை (2ம் தேதி) துவங்குகிறது. வில்லியனுாரில், வரலாற்றுச் சிறப்பு மிக்க துாய லுார்து அன்னை ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை  முடிந்து, 6வது நாளில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா, நாளை (2ம் தேதி) கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. காலை 5:30 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி  தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, மாதா குளத்தைச் சுற்றி திருக்கொடி பவனி, கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா  நடைபெறும் நாட்களில், தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை  7:30 மணிக்கு புதுச்சேரி கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது.  இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 11ம் தேதி காலை 6:30 மணிக்கு பிறகு நடக்கும் திருப்பலியை தொடர்ந்து, கொடியிறக்கத்துடன்  ஆண்டு விழா நிறைவு பெறுகிறது. விழா  ஏற்பாடுகளை வில்லியனுார் திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில்  விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !