உலகின் மிகப் பெரிய திருவிளக்கு!
ADDED :3874 days ago
கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள செட்டி குலங்கரா தேவி கோயிலிலுள்ள விளக்கு உலகிலேயே மிகப் பெரிய விளக்கு ஆகும். இதன் எடை 3300 பவுண்ட், உயரம் 11 அடி, 1100 திரிகள் போடக்கூடிய வகையில் 13 அடுக்குகள் கொண்டது. இந்த விளக்கை 2 பொற்கொல்லர்கள் 17 துணை ஆட்கள் துணையுடன் வடிவமைத்து உள்ளார்கள். இதனை முடிக்க 18 மாதங்கள் ஆயின. இதன் அகலம் 6.8 அடி, இந்த விளக்கில் 108 திரிகள் ஏற்றக்கூடியது தான் மிகச் சிறிய அடுக்கு ஆகும்.