உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சதுரகிரி கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம்

வத்திராயிருப்பு சதுரகிரி கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையின் சார்பில் சதுரகிரி
மலை கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம், பாதுகாப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

வத்திராயிருப்பு யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை அலுவலகத்தில் சேவை திட்டப் பணிகளுக்கான துவக்க விழா நடந்தது. மதுரை மண்டல மேலாளர் ஜிதேந்தர் மணிராம் தலைமை வகித்தார். மதுரை அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் ஜெகதீசன் வரவேற்றார். இதில் வங்கியின் சேவை திட்டங்களாக சதுரகிரி கோயில்களுக்கு பணம் பாதுகாப்புக்காக 10 பெட்டகங்கள், பணம் எண்ணும் இயந்திரமும் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, வங்கியின் மண்டலஅலுவலக வர்த்தக மேலாளர் சீனிவாசன், லயன்ஸ் சங்க நிர்வாகி கணேசபாண்டியன், இந்து பள்ளி கமிட்டி நிர்வாகி சீதாராமன் பேசினர். இந்து பள்ளி, நாடார் பள்ளி கமிட்டி நிர்வாகிகள், லயன்ஸ் சங்கம், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வங்கி அலுவலர் குருசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !