அண்ணமங்கலம் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண பிரதிஷ்டா விழா
ADDED :3520 days ago
செஞ்சி: அண்ணமங்கலம் 1008 ஸ்ரீ ஆதிநாத பகவான் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண பிரதிஷ்டா விழா நடந்தது.
செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலம் பகவான் 1008 ஸ்ரீ ஆதிநாத பகவான் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண பிரதிஷ்டா விழா ஏப்.,1ல் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி வாஸ்த்து விதானம், நவக்கரஹ சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ஏப்.,1 காலை 8 மணிக்கு ஜினபாலகன் ஜெனணம், கோபுர கலசம் ஸ்தாபனம், யானை மீது புனித கலச நீர் ஊர்வலம், சிலை ஸ்தாபிதம், ஜென்மாபிஷேக ஊர்வலம், ஜென்மாபிஷேகம் ஆகியன நடந்தது. மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் சர்வ ஜினாலய பரிபாலகர் இலட்சுமி சேன மகாசாமிகள், திருமலை அரகந்தகிரி மடம் தவளகீர்த்தி சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை அண்ணமங்கலம் ஜெயின் சமூகத்தினர் செய்திருந்தனர்.