உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீராம்பட்டினம் கோவிலில் 102ம் ஆண்டு செடல் திருவிழா

வீராம்பட்டினம் கோவிலில் 102ம் ஆண்டு செடல் திருவிழா

புதுச்சேரி: அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில், 102ம் ஆண்டு செடல், தேர் திருவிழா, வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தன்று காலை 5:00 மணிக்கு, சங்கராபரணி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 8:00 மணியளவில் கொடியேற்றம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.செடல் உற்சவம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி, 15ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு தேரடி உற்சவம், 16ம் தேதி இரவு 10:00 மணியளவில் தெப்பல் உற்சவம், 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !