உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனம் தீர்த்தக்குளம், ஏரிக்கோடி தெருவிலுள்ள புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. காலை ௮:௨௦ மணிக்கு தீபாராதனைக்கு பிறகு, யாத்ரா தானம் கலசம் புறப்பாடும், தொடர்ந்து ௮:௪௫ மணிக்கு, புத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில், நகராட்சி தலைவர் வெங்கடேசன், நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஏரிக்கோடித் தெரு மற்றும் தீர்த்தக்குளம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !