உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழண்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

பழண்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

திருபுவனை: திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. திருபுவனை கிராமத்தில் உள்ள பழண்டி மாரியம்மன் கோவிலில், கடந்த ஆண்டு ஏப்., 3ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிவடைந்ததையடுத்து, நேற்று நிறைவு விழா நடந்தது.காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, 8.00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பால் அபிஷேகம் நடந்தது.விழாவில் திருபுவனை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !