காணிக்கை பலன்!
ADDED :3870 days ago
ஆடை காணிக்கை: தெய்வங்களுக்கு அளிக்கப்படும் புடவை, வஸ்திரம் போன்றவை குல தெய்வ தோஷத்தை நீக்கும். எண்ணியது கைகூடும். கடன் தொல்லை நீங்கும்.
எண்ணெய் தானம்: மனையிலுள்ள அனைத்து தோஷங்களையும் போக்கும். மனக்குழப்பங்களை நீக்கும். தெளிவான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். பகைவர்களின் தொல்லையிலிருந்து காப்பாற்றும். இல்லத்தை தெய்வீகக்களையுடன் விளங்க செய்யும்.
அன்னதானம்: இப்பிறவியிலேயே பலன் தரும். மூதாதையர் வழிவந்த பாவங்களை நீக்கி, சந்ததிகளின் எதிர்காலத்தை சிறப்புறச்செய்யும். குடும்பத்தில் அமைதியையும், சாந்தியையும் கொடுக்கும். வளமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.