விருதுநகர் பராசக்தி மாரியம்மன் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்!
ADDED :3604 days ago
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோயில் பங்குனி விழா கடந்த 27 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.,3ல் நடந்தது. மறு நாள் பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து நேற்று மாலை வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.