உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

திருமலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை, ஏப்., 8ல், கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று காலை, கோவில் கருவறை முதல், மகா துவாரம் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், கஸ்துாரி, கோரோஜனம், கஸ்துாரி மஞ்சள், பச்சை கற்பூரம் உள்ளிட்ட வாசனை பொருட்களால், கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில், ஆந்திர கவர்னர் நரசிம்மன், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான ஊழியர்களும் பங்கேற்றனர்.

ரூ.5 கோடி நகைகள்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால், ஏழுமலையானுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகளை காணிக்கையாக வழங்குவதாக, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டுதல் வைத்திருந்தார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகி, ராவ் முதல்வரானார். இதையடுத்து, முதல்வர் சந்திரசேகர ராவ், தேவஸ்தான வங்கி கணக்கிற்கு, 5 கோடி ரூபாயை செலுத்தினார். நகை நிறுவனம், 14.9 கிலோ எடையில், தாமரை வடிவ, சாலிக்கிராம மாலை; 4.9 கிலோ எடையில், ஐந்து வரிசை கண்டாபரணத்தையும், 4.97 கோடி ரூபாய் செலவில் தயாரித்து, தேவஸ்தானத்திற்கு அளித்து உள்ளது.சந்திரசேகர ராவ், விரைவில் திருமலை வந்து, நகைகளை காணிக்கை வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !