உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.  மாதமிருமுறை வரும் பிரதோஷ நாட்கள், சிவபெருமானுக்கு உகந்த நாளாக போற்றப்படுகிறது. அந்நாட்களில், மாலை, 4:30 மணியிலில் இருந்து, 6:00 மணி வரை பிரதோஷ காலமாகும். பிரதோஷ நாளான நேற்று மாலை, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !