தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!
இளையான்குடி: தாயமங்கலம் கோயிலில் நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் இரவு 10 மணிக்கு சிம்மம்,காமதேனு,பூத வாகனங்களில் வீதி உலா வந்தார். முக்கிய விழாவான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு மின்சார அலங்காரத்துடன் கூடிய ரதத்தில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் தாயமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் அய்யாச்சாமி, கோயில் திருவிழா கடை குத்தகைதாரர் குழந்தைவேலு, தடியமங்கலம் ஊராட்சி தலைவர் சேகர்,தாயமங்கலம் ஆனந்த், புக்குளி நாட்டார்கள்,தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர். இன்றுகாலை 7.30 மணிக்கு பால்குடமும்,மாலை6.15 மணிக்கு ஊஞ்சலும்,இரவு 10.35 மணிக்கு புஷ்பபல்லக்கும் நடக்கிறது. நாளை இரவு 7.30 மணிக்கு திருக்கோயில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.