கோத்தகிரி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 23ம் தேதி, அபிஷேக மலர் அலங்கார வழிபாடுடன், விநாயகர் கோவிலில் இருந்து, மகளிர் பால்குடம் எடுத்து, மாரியம்மன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 24ம் தேதி கோத்தகிரி மகளிர் மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து, அக்னி கம்பம் பூச்சாட்டு நிகச்சியும் நடந்தது. 25ம் தேதி கஞ்சி வார்த்தல் பூஜை இடம்பெற்றது. இன்று காலை, 11:00 மணிக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜையும், பாகல், 1:00 மணிக்கு, அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு, அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் துணை கோவிலான, குன்னூர் சாலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னி மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், ஊட்டி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸீதா சமேத ஸ்ரீ ராமசந்திரன் மூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நிழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.