உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிலையில், மே 1 அதிகாலை அழகர் ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது.  பின்னர் தீர்த்த குடங்கள் புறப்பாடாகி யாக சாலையை அடைந்தது. தினமும் காலை, மாலை யாக பூஜைகள் நடக்கும். மேலும் ஏப்., 29 வரை இரவு 7:00 மணிக்கு தினமும் பெருமாள் ஆடி வீதியில் வலம் வருவார். ஏப்., 30 காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகிய காலை 9:00 மணிக்கு பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளுவார். தொடர்ந்து மே 1 அதிகாலை 4:00 மணிக்கு ஏராளமான தீவட்டிகள் வெளிச்சத்தில் மேளதாளம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். பின்னர் 6:00 மணிக்கு தல்லாகுளத்தில் சேர்க்கையாவார். அன்று காலை 9:30 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீர் பீய்ச்சி அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு மண்டபத்தில் சேர்க்கை ஆகிறார். மே 2 மாலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து இரவு விடிய விடிய தசாவதார சேவையில் அருள் பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !