சாஸ்தாவின் மகன்
ADDED :3870 days ago
சபரிமலை சாஸ்தா பிரம்மச்சரிய விரதம் பூண்டவர். ஆனால், மற்ற தலங்களில் கிரகஸ்த நிலையில் பூர்ண புஷ்கலையுடன் அவர் அருள்பாலிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கு பதினெட்டாம்படி என அழைக்கப்படும் த்ருகுன்னப்புழை தர்ம சாஸ்தா கோயிலில் சாஸ்தா மனைவி மற்றும் மகனுடன் காட்சி தருவது சிறப்பிலும் சிறப்பு. இப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் வேறெந்த சாஸ்தா கோயிலிலும் இல்லை. கடலோரத்தில் இக்கோயில் உள்ளது. ஆடி அமாவாசை இங்கு பிரதானம்.